The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Cow [Al-Baqara] - Tamil Translation - Omar Sharif - Ayah 275
Surah The Cow [Al-Baqara] Ayah 286 Location Madanah Number 2
ٱلَّذِينَ يَأۡكُلُونَ ٱلرِّبَوٰاْ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِي يَتَخَبَّطُهُ ٱلشَّيۡطَٰنُ مِنَ ٱلۡمَسِّۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُوٓاْ إِنَّمَا ٱلۡبَيۡعُ مِثۡلُ ٱلرِّبَوٰاْۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ فَمَن جَآءَهُۥ مَوۡعِظَةٞ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمۡرُهُۥٓ إِلَى ٱللَّهِۖ وَمَنۡ عَادَ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ [٢٧٥]
வட்டியைத் தின்பவர்கள் ஷைத்தான் தாக்கி பைத்தியம் பிடித்தவன் எழுவது போன்றே தவிர (மறுமையில்) எழ மாட்டார்கள். அதற்கு காரணம், “வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றுதான்’’ என நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கினான்; வட்டியைத் தடை செய்தான். ஆக, யார் தனது இறைவனிடமிருந்து உபதேசம் தனக்கு வந்த பிறகு, (வட்டியை விட்டு) அவர் விலகினால், (வட்டியில்) முன்னர் சென்றது (-வட்டி தடுக்கப்படுவதற்கு முன்னர் அவர் வாங்கிய வட்டி) அவருக்குரியது. அவருடைய காரியம் அல்லாஹ்வின் பக்கம் உள்ளது. (அல்லாஹ் அவரை மன்னிப்பான்.) யார் (உபதேசத்திற்குப் பின்னரும் வட்டியின் பக்கம்) திரும்புவார்களோ அவர்கள் நரகவாசிகள்தான் அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.