عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The Table Spread [Al-Maeda] - Tamil Translation - Omar Sharif - Ayah 95

Surah The Table Spread [Al-Maeda] Ayah 120 Location Madanah Number 5

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقۡتُلُواْ ٱلصَّيۡدَ وَأَنتُمۡ حُرُمٞۚ وَمَن قَتَلَهُۥ مِنكُم مُّتَعَمِّدٗا فَجَزَآءٞ مِّثۡلُ مَا قَتَلَ مِنَ ٱلنَّعَمِ يَحۡكُمُ بِهِۦ ذَوَا عَدۡلٖ مِّنكُمۡ هَدۡيَۢا بَٰلِغَ ٱلۡكَعۡبَةِ أَوۡ كَفَّٰرَةٞ طَعَامُ مَسَٰكِينَ أَوۡ عَدۡلُ ذَٰلِكَ صِيَامٗا لِّيَذُوقَ وَبَالَ أَمۡرِهِۦۗ عَفَا ٱللَّهُ عَمَّا سَلَفَۚ وَمَنۡ عَادَ فَيَنتَقِمُ ٱللَّهُ مِنۡهُۚ وَٱللَّهُ عَزِيزٞ ذُو ٱنتِقَامٍ [٩٥]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமு*டையவர்களாக இருக்கும்போது வேட்டை(ப் பிராணி)களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவர் அதை வேண்டுமென்றே கொன்றாரோ அவர் தான் கொன்ற வேட்டைப் பிராணிக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலிருந்து எது ஒப்பானதாக இருக்கிறதோ அ(தை பரிகாரமாக அறுத்து குர்பானி கொடுப்பது அவர)து தண்டனையாகும். உங்களில் நேர்மையான இருவர் அதற்கு (-வேட்டையாடப்பட்ட பிராணிக்கு எது சரியாக ஒப்பானதாக இருக்கிறது என்பதற்கு) தீர்ப்பளிப்பார்கள். கஅபாவை அடைகிற பலியாக (-புனித ஹரம் எல்லையை அடைந்து அங்கு அறுக்கப்பட வேண்டும்). அல்லது (அதன் மதிப்பின் அளவிற்கு) ஏழைகளுக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லது (உணவளிக்க வசதியில்லாதவன்) அதற்குச் சமமான எண்ணிக்கை நோன்பு (நோற்க வேண்டும்). இது அவன் தன் செயலின் கெட்ட முடிவை அனுபவிப்பதற்காக (உள்ள பரிகாரம்) ஆகும். முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். எவர் (குற்றத்தின் பக்கம்) மீண்டாரோ அல்லாஹ் அவரை தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன் ஆவான்.