The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe heights [Al-Araf] - Tamil Translation - Omar Sharif - Ayah 188
Surah The heights [Al-Araf] Ayah 206 Location Maccah Number 7
قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي نَفۡعٗا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ وَلَوۡ كُنتُ أَعۡلَمُ ٱلۡغَيۡبَ لَٱسۡتَكۡثَرۡتُ مِنَ ٱلۡخَيۡرِ وَمَا مَسَّنِيَ ٱلسُّوٓءُۚ إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ وَبَشِيرٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ [١٨٨]
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எந்த ஒரு பலனுக்கும் (அதை எனக்கு தேடுவதற்கு) இன்னும், எந்த ஒரு கெடுதிக்கும் (அதை என்னை விட்டு அகற்றுவதற்கு) நான் உரிமை பெறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால் நன்மையை அதிகம் பெற்றிருப்பேன்; இன்னும், தீங்குகள் ஏதும் எனக்கு ஏற்பட்டிருக்காது. (பாவிகளை) எச்சரிப்பவராகவும் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு நற்செய்தி கூறுபவராகவுமே தவிர நான் இல்லை.”