عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The Fig [At-Tin] - Tamil Translation - Omar Sharif

Surah The Fig [At-Tin] Ayah 8 Location Maccah Number 95

அத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஆலிவ் மரத்தின் மீது சத்தியமாக!

சினாய் மலை மீது சத்தியமாக!

அபயமளிக்கக்கூடிய இந்த நகரத்தின் மீது சத்தியமாக!

திட்டவட்டமாக, மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம்.

பிறகு, தாழ்ந்தோரில் மிகத் தாழ்ந்தவனாக (முற்றிலும் பலவீனம் ஏற்படுகிற தள்ளாடும் வயதிற்கு) அவனைத் திருப்பினோம்.

எனினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ (அவர்கள் தள்ளாடும் வயதை அடைந்து நல்லமல் செய்ய முடியாமல் ஆகிவிட்டாலும்) அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.

ஆக, இ(த்தனை சான்றுகளை விவரித்த)தற்குப் பின்னர், (அடியார்களின் அமல்களை அல்லாஹ் விசாரிப்பதில், இன்னும் அவர்களுக்கு) கூலி கொடுப்பதில் உம்மை யார் பொய்ப்பிப்பார்?

தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலான தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் இல்லையா?