The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Cow [Al-Baqara] - Tamil Translation - Omar Sharif - Abridged Version - Ayah 54
Surah The Cow [Al-Baqara] Ayah 286 Location Madanah Number 2
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِنَّكُمۡ ظَلَمۡتُمۡ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلۡعِجۡلَ فَتُوبُوٓاْ إِلَىٰ بَارِئِكُمۡ فَٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ عِندَ بَارِئِكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ [٥٤]
மூஸா தன் சமுதாயத்திற்கு, "என் சமுதாயமே! நீங்கள் காளைக்கன்றை(த்தெய்வமாக) எடுத்துக் கொண்டதினால், நிச்சயமாக நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்கு அநியாயம் செய்தீர்கள். எனவே, (பாவத்தை விட்டு விலகி) உங்களைப் படைத்தவனின் பக்கம் திரும்புங்கள்; உங்கள் உயிர்களைக் கொல்லுங்கள். அது உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்குச் சிறந்ததாகும்" என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். எனவே, (நீங்கள் உங்களைக் கொன்றவுடன் அல்லாஹ்) உங்களை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை அங்கீகரிப்பவன், பேரன்பாளன்.

