The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe family of Imran [Aal-e-Imran] - Tamil Translation - Omar Sharif - Abridged Version - Ayah 154
Surah The family of Imran [Aal-e-Imran] Ayah 200 Location Madanah Number 3
ثُمَّ أَنزَلَ عَلَيۡكُم مِّنۢ بَعۡدِ ٱلۡغَمِّ أَمَنَةٗ نُّعَاسٗا يَغۡشَىٰ طَآئِفَةٗ مِّنكُمۡۖ وَطَآئِفَةٞ قَدۡ أَهَمَّتۡهُمۡ أَنفُسُهُمۡ يَظُنُّونَ بِٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ ظَنَّ ٱلۡجَٰهِلِيَّةِۖ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلۡأَمۡرِ مِن شَيۡءٖۗ قُلۡ إِنَّ ٱلۡأَمۡرَ كُلَّهُۥ لِلَّهِۗ يُخۡفُونَ فِيٓ أَنفُسِهِم مَّا لَا يُبۡدُونَ لَكَۖ يَقُولُونَ لَوۡ كَانَ لَنَا مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٞ مَّا قُتِلۡنَا هَٰهُنَاۗ قُل لَّوۡ كُنتُمۡ فِي بُيُوتِكُمۡ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقَتۡلُ إِلَىٰ مَضَاجِعِهِمۡۖ وَلِيَبۡتَلِيَ ٱللَّهُ مَا فِي صُدُورِكُمۡ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ [١٥٤]
பிறகு, துயரத்திற்குப் பின்னர் உங்கள் மீது சிறு நித்திரையை மன நிம்மதிக்காக இறக்கினான். உங்களில் ஒரு வகுப்பாரை அது சூழ்ந்தது. (வேறு) ஒரு வகுப்பாரோ, அவர்களுக்கு தங்கள் ஆன்மாக்கள் கவலையைத் தந்தன. (இணை வைப்பவர்களின்) மடத்தனமான எண்ணத்தைப் போன்று அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாததை எண்ணுகின்றனர். "நமக்கு அதிகாரத்தில் ஏதும் உண்டா?" என்று கூறுகின்றனர். (நபியே) கூறுவீராக; "நிச்சயமாக எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குரியதே!'' உமக்கு வெளிப்படுத்தாதவற்றை தங்களுக்குள் மறைக்கின்றனர். "அதிகாரத்தில் ஏதும் நமக்கு இருந்திருந்தால், இங்கு கொல்லப்பட்டிருக்க மாட்டோம்" எனக் கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக: "நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்தாலும் எவர்கள் மீது கொலை விதிக்கப்பட்டதோ அவர்கள் தாங்கள் கொல்லப்படும் இடங்களின் பக்கம் வெளியாகியே தீருவார்கள்." (நம்பிக்கையாளர்களே) அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களிலுள்ளவற்றைப் பரிசோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு செய்தான்). நெஞ்சங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன்.

