The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe City [Al-Balad] - Tamil Translation - Omar Sharif
Surah The City [Al-Balad] Ayah 20 Location Maccah Number 90
இந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
இன்னும், (நபியே!) நீர் இந்த நகரத்தில் (எதிரிகளைத் தண்டிப்பதற்கு) அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர்.
தந்தை மீதும், அவர் பெற்றெடுத்தவர்கள் மீதும் சத்தியமாக!
திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.
தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?
அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று (அவன் பெருமையாக) கூறுகிறான்.
அவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?
இரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா?
இன்னும், ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் படைக்கவில்லையா?)
இன்னும், இரு பாதைகளை அவனுக்கு வழிகாட்டினோம்.
ஆக, அவன் அகபாவைக் கடக்கவில்லை.
(நபியே!) அகபா என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
(அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல்,
அல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல்,
(யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு,
அல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்).
(இத்தகைய புண்ணியத்தை செய்த) பிறகு, (அத்துடன்) அவர் நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் ஆகிவிட வேண்டும்.
இ(த்தகைய நன்மைகளை செய்த)வர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள்,
இன்னும், எவர்கள் நம் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்கள் இடப்பக்கமுடையவர்கள் (நரகவாசிகள்) ஆவார்கள்.
(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்த) நரகம் அவர்கள் மீது மூடப்படும். (அதற்கு வாசல்களோ ஜன்னல்களோ இருக்காது.)